• Mar 10 2026

சமன் ஏக்கநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

shanu / Feb 11th 2026, 4:24 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது. 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்திற்காக 162 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுமதித்ததன் ஊடாக, அந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 


இதற்கமைய, அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

சமன் ஏக்கநாயக்க மீண்டும் விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்திற்காக 162 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுமதித்ததன் ஊடாக, அந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். 

Advertisement

Advertisement

Advertisement