மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் இன்றையதினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்றுகூடிய மக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டகாரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டகாரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.
இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொழுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பியிருந்தனர்
இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில் சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளர்.
சிந்துஜா, வேனுஜா மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராடிய மூவர் பல மாதம் கழித்து கைது மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி போராடிய மூவர் இன்றையதினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்றுகூடிய மக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில் போராட்டகாரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டகாரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொழுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பியிருந்தனர்இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில் சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளர்.