புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒருபகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் சித்த வைத்திய முகாம் ஒன்று நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சித்த வைத்திய முகாமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்படுகிறது.
இம்முகாமில் கபம், சுரம், பித்தம், பீனிசம், ஆஸ்த்துமா, மூட்டு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் இடம்பெறுகின்றது. மக்களின் நலனுக்காக மாதந்தோறும் இரண்டு நாட்கள் இவ்வாறான சித்த வைத்திய முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் வைத்தியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம் – மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒருபகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் சித்த வைத்திய முகாம் ஒன்று நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த சித்த வைத்திய முகாமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்படுகிறது.இம்முகாமில் கபம், சுரம், பித்தம், பீனிசம், ஆஸ்த்துமா, மூட்டு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் இடம்பெறுகின்றது. மக்களின் நலனுக்காக மாதந்தோறும் இரண்டு நாட்கள் இவ்வாறான சித்த வைத்திய முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந் நிகழ்வில் வைத்தியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்