• May 18 2025

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

Thansita / May 17th 2025, 10:54 am
image

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும்  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில்  கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும், 70 வயதுடைய பெண்ணும் காயமடைந்துள்ளனர்

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுமோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும்  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில்  கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும், 70 வயதுடைய பெண்ணும் காயமடைந்துள்ளனர்இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement