மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹட்டன் நோக்கி தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று (27) உட்லென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவனை தலைக்கவசம் இன்றி ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதுடன், சிறுவர்கள் தொடர்பிலும் கூடுதல் பாதுகாப்பு அவசியம் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தலைக்கவசமின்றி சிறுவனை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள். ஹட்டன் சாலையில் அதிர்ச்சி மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஹட்டன் நோக்கி தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இன்று (27) உட்லென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சிறுவனை தலைக்கவசம் இன்றி ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை, மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பதுடன், சிறுவர்கள் தொடர்பிலும் கூடுதல் பாதுகாப்பு அவசியம் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.