முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுப பாலியல் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வவுனிக்குளம் பகுதியில் மல்லாவி திருச்சபை ஊழியர் ஏற்பாடு செய்துள்ளார்.
தனது பொறுப்பில் உள்ள சிறுவர் அபிவிருத்தித் திட்ட ஊழியர்களை ஒன்றிணைத்து குறித்த கொண்டாட்டம் வவுனிக்குள குளக்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கொண்டாட்டம் முடித்து ஏனைய ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களில் வீடு திரும்பியுள்ளனர்.
20, மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்கள் வாகனம் இல்லாமையால், அவர்களை மதபோதகர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குளக்கட்டின் முடிவு வரை பயணித்துள்ளார்.
பயணத்தில் மயக்கமுற்ற பெண்களை குறித்த போதகர் மற்றும் பயணித்த இரண்டு ஊழியர்கள் இணைந்து கூட்டு பாலியல் முயற்சி செய்ததாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமக்கு வைன் வழங்கப்பட்டதாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மல்லாவி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்
இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை செலுத்திய சாரதியும் மற்றுமொருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். இதன்போது குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மதுபோதகர் கைது செய்யப்பட்டார். இதனடிப்படையில் மத போதகர் உட்பட மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மல்லாவி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்திரவதை; போதகர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்திரவதைபோதகர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டுப பாலியல் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வவுனிக்குளம் பகுதியில் மல்லாவி திருச்சபை ஊழியர் ஏற்பாடு செய்துள்ளார்.தனது பொறுப்பில் உள்ள சிறுவர் அபிவிருத்தித் திட்ட ஊழியர்களை ஒன்றிணைத்து குறித்த கொண்டாட்டம் வவுனிக்குள குளக்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கொண்டாட்டம் முடித்து ஏனைய ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களில் வீடு திரும்பியுள்ளனர்.20, மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்கள் வாகனம் இல்லாமையால், அவர்களை மதபோதகர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குளக்கட்டின் முடிவு வரை பயணித்துள்ளார். பயணத்தில் மயக்கமுற்ற பெண்களை குறித்த போதகர் மற்றும் பயணித்த இரண்டு ஊழியர்கள் இணைந்து கூட்டு பாலியல் முயற்சி செய்ததாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது, தமக்கு வைன் வழங்கப்பட்டதாகவும், அதனால் மயக்கம் ஏற்பட்டதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மல்லாவி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை செலுத்திய சாரதியும் மற்றுமொருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். இதன்போது குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து மதுபோதகர் கைது செய்யப்பட்டார். இதனடிப்படையில் மத போதகர் உட்பட மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மல்லாவி பொலிசார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.