• Oct 05 2026

2027ல் இலங்கையில் கடும் மின்தடை அபாயம்? வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை!

Chithra / Oct 4th 2026, 10:52 am
image


2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கை தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, 2027ஆம் ஆண்டில் மின்தடை ஏற்படுவதற்கான தெளிவான அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பாக, எதிர்வரும் ஆண்டில் ஒரு மின்னுற்பத்தி நிலையமாவது மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாவிட்டால், மின்தடை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


2027ல் இலங்கையில் கடும் மின்தடை அபாயம் வெளியான அதிர்ச்சி எச்சரிக்கை 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 2027ஆம் ஆண்டில் மின்தடை ஏற்படுவதற்கான தெளிவான அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக, எதிர்வரும் ஆண்டில் ஒரு மின்னுற்பத்தி நிலையமாவது மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாவிட்டால், மின்தடை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement