• Apr 15 2026

பி.ப. 2 மணிக்கு பின் கடும் மின்னல்; 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Mar 17th 2026, 1:16 pm
image

 

மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுக்கான வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளுது. 


இன்று (17) விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது, இரவு 11.00 மணி வரையில் அமுலில் இருக்கும்.


அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குறிப்பிட்ட சில பகுதியில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பி.ப. 2 மணிக்கு பின் கடும் மின்னல்; 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை  மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுக்கான வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளுது. இன்று (17) விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது, இரவு 11.00 மணி வரையில் அமுலில் இருக்கும்.அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குறிப்பிட்ட சில பகுதியில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement