• Feb 12 2026

நிலாவெளி கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ஏழு பேர்!

Chithra / Feb 5th 2026, 7:52 am
image

 

 

திருகோணமலை - நிலாவெளி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏழு பேர், கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்புப் பிரிவினரால் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


கேகாலை பகுதியிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் திருகோணமலைக்குச் சுற்றுலா வந்திருந்தனர். 


இதன்போது நிலாவெளி கடற்கரையில் அவர்கள் நீந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏழு பேர் இராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.


அங்கிருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பியதை அடுத்து, திருகோணமலை அலஸ்வத்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படை கடலோரக் காவல்படை அதிகாரிகள் ஏழு பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.


மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இருவர், ஆம்புலன்ஸ் சேவை மூலம் நிலாவெளி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலாப் பயணிகள் கடலில் நீந்தும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்புப் பிரிவினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.


நிலாவெளி கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ஏழு பேர்   திருகோணமலை - நிலாவெளி கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏழு பேர், கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்புப் பிரிவினரால் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.கேகாலை பகுதியிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் திருகோணமலைக்குச் சுற்றுலா வந்திருந்தனர். இதன்போது நிலாவெளி கடற்கரையில் அவர்கள் நீந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏழு பேர் இராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.அங்கிருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பியதை அடுத்து, திருகோணமலை அலஸ்வத்த பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படை கடலோரக் காவல்படை அதிகாரிகள் ஏழு பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இருவர், ஆம்புலன்ஸ் சேவை மூலம் நிலாவெளி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுற்றுலாப் பயணிகள் கடலில் நீந்தும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்புப் பிரிவினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement