• May 23 2026

மூங்கிலாறில் கஞ்சா விற்பனை – 24 வயது இளைஞன் வாள்களுடன் கைது!

shanu / Nov 3rd 2025, 10:59 am
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு  விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து  நேற்று 

(02) விஷேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


அச்சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து 1 கிலோகிராம் 250 கிராம் கஞ்சாவும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடையதாக 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனையும் மீட்கப்பட்ட கஞ்சா பொதியையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மூங்கிலாறில் கஞ்சா விற்பனை – 24 வயது இளைஞன் வாள்களுடன் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு  விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து  நேற்று (02) விஷேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அச்சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து 1 கிலோகிராம் 250 கிராம் கஞ்சாவும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடையதாக 24 வயதுடைய இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனையும் மீட்கப்பட்ட கஞ்சா பொதியையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement