• May 05 2026

நாவலப்பிட்டியில் பாடசாலை வேன் விபத்து: 13 மாணவர்கள் படுகாயம்

Chithra / May 5th 2026, 10:37 am
image

நாவலப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில், 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 


கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், நாவலப்பிட்டி திஸ்பனே சந்திப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.


விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 முதல் 10 வயதுக்கிடையில் உள்ள 11 மாணவிகளும், 2 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, வேனை ஓட்டி சென்ற சாரதியும் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். குலதுங்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாவலப்பிட்டியில் பாடசாலை வேன் விபத்து: 13 மாணவர்கள் படுகாயம் நாவலப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில், 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், நாவலப்பிட்டி திஸ்பனே சந்திப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 முதல் 10 வயதுக்கிடையில் உள்ள 11 மாணவிகளும், 2 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, வேனை ஓட்டி சென்ற சாரதியும் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். குலதுங்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement