• Jul 27 2025

புலிகளின் அழுத்தத்தால் நாடாளுமன்றிலிருந்து விலகிய சம்பந்தன் - தயாசிறி எம்.பி. வெளியிட்ட தகவல்

Chithra / Jul 26th 2025, 8:09 am
image


தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன், 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றிற்கு வந்தபோது அது மிகவும் சவால் நிறைந்த காலமாக காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுஅவர் உரையாற்றுகையில் 

ரெலோ கட்சியினருக்கு 1983 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்திலிருந்து விடுதலைப்புலிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர்கள் 83 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நாடாளுமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

அதாவது, 6வது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒற்றையாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவாக சத்தியப் பிரமாணம் எடுக்க தயாரான போது அதனை மறுக்குமாறு விடுதலைப்புலிகள் அழுத்தம் விடுத்திருந்தனர். 

எனினும் அவர்களையும் மீறி சத்தியப்பிரமாணம் செய்திருந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 மாதங்களுக்கு உறுப்புரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடாளுமன்றிற்கு வரவில்லை அதில் ஒருவர் தான் சம்பந்தனும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் நாடாளுமன்றிற்கு வருவதற்கு போட்டியிட்டாலும் அவரால் முடியவில்லை. அதன்பின்னர், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றார். தங்கதுரையின் மறைவின் பின்னர் அவருக்கு நாடாளுமன்றில் வாய்ப்புக் கிடைத்தது.

31 ஆண்டுகளும் 3 மாதங்களும் அவர் நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.  2001 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளில் இருந்த பிரச்சினைகள் தொடர்பில் அவர் எங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினார். எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் அழுத்தத்தால் நாடாளுமன்றிலிருந்து விலகிய சம்பந்தன் - தயாசிறி எம்.பி. வெளியிட்ட தகவல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன், 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றிற்கு வந்தபோது அது மிகவும் சவால் நிறைந்த காலமாக காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்திருந்தார்.நாடாளுமன்றத்தில் நேற்றுஅவர் உரையாற்றுகையில் ரெலோ கட்சியினருக்கு 1983 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்திலிருந்து விடுதலைப்புலிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர்கள் 83 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நாடாளுமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.அதாவது, 6வது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒற்றையாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவாக சத்தியப் பிரமாணம் எடுக்க தயாரான போது அதனை மறுக்குமாறு விடுதலைப்புலிகள் அழுத்தம் விடுத்திருந்தனர். எனினும் அவர்களையும் மீறி சத்தியப்பிரமாணம் செய்திருந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 மாதங்களுக்கு உறுப்புரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடாளுமன்றிற்கு வரவில்லை அதில் ஒருவர் தான் சம்பந்தனும் எனவும் தெரிவித்திருந்தார்.அதன் பின்னர் அவர் மீண்டும் நாடாளுமன்றிற்கு வருவதற்கு போட்டியிட்டாலும் அவரால் முடியவில்லை. அதன்பின்னர், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றார். தங்கதுரையின் மறைவின் பின்னர் அவருக்கு நாடாளுமன்றில் வாய்ப்புக் கிடைத்தது.31 ஆண்டுகளும் 3 மாதங்களும் அவர் நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.  2001 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளில் இருந்த பிரச்சினைகள் தொடர்பில் அவர் எங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினார். எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement