சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த அனுபவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பட்டானே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இரவு சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அப்போது அந்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். நடந்து கொண்டிருக்கும்போது தனது மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணி, தன்னை பின்தொடர்ந்து வந்த மனித வடிவ ரோபோவுடன் திடீரென மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது அருகில் அந்த ரோபோ நின்றிருப்பதை கவனித்ததும் அவர் மிகவும் பயந்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
“நீ என் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறாய்!” என்று அவர் ரோபோவிடம் கத்தியுள்ளார்
இந்தச் சம்பவத்தை அங்கு சென்றுகொண்டிருந்த சிலர் நேரில் பார்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, அந்த ரோபோ மகாவில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. மேலும் அந்த பகுதியில் “பிரச்சார நடவடிக்கைகள்” மேற்கொள்ள அது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் இருக்கும் இடங்களில் அதை பயன்படுத்தும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த கல்வி மையத்தின் பிரதிநிதியான டோவின் மேக் (Towin Mak), தெரிவித்ததாவது, அந்த ரோபோ அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் ஏற்பட்டது.
ஒரு பெண் தனது கைபேசியை பார்க்க நிற்கும்போது, அந்த ரோபோ அவருக்குப் பின்னால் நின்றது. அவரை கடந்து செல்ல முடியாததால் ரோபோ பின்னால் காத்திருந்ததாகவும் அவர் விளக்கினார்.
பின்னர் அந்த பெண் ரோபோவை கவனித்ததும் திடுக்கிட்டு பயந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது அவர் உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, அவர் எந்தவித புகாரும் அளிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பொலிஸார் ரோபோவை 'கைது செய்துவிட்டார்கள்' என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மூதாட்டியை தொந்தரவு செய்த ரோபோ கைது சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த அனுபவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் பட்டானே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இரவு சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்போது அந்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். நடந்து கொண்டிருக்கும்போது தனது மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணி, தன்னை பின்தொடர்ந்து வந்த மனித வடிவ ரோபோவுடன் திடீரென மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. தனது அருகில் அந்த ரோபோ நின்றிருப்பதை கவனித்ததும் அவர் மிகவும் பயந்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.“நீ என் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறாய்” என்று அவர் ரோபோவிடம் கத்தியுள்ளார்இந்தச் சம்பவத்தை அங்கு சென்றுகொண்டிருந்த சிலர் நேரில் பார்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.தகவல்களின்படி, அந்த ரோபோ மகாவில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. மேலும் அந்த பகுதியில் “பிரச்சார நடவடிக்கைகள்” மேற்கொள்ள அது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் அந்த ரோபோ அதன் 50 வயதான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் இருக்கும் இடங்களில் அதை பயன்படுத்தும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அந்த கல்வி மையத்தின் பிரதிநிதியான டோவின் மேக் (Towin Mak), தெரிவித்ததாவது, அந்த ரோபோ அந்த பகுதியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் ஏற்பட்டது.ஒரு பெண் தனது கைபேசியை பார்க்க நிற்கும்போது, அந்த ரோபோ அவருக்குப் பின்னால் நின்றது. அவரை கடந்து செல்ல முடியாததால் ரோபோ பின்னால் காத்திருந்ததாகவும் அவர் விளக்கினார்.பின்னர் அந்த பெண் ரோபோவை கவனித்ததும் திடுக்கிட்டு பயந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது அவர் உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, அவர் எந்தவித புகாரும் அளிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பொலிஸார் ரோபோவை 'கைது செய்துவிட்டார்கள்' என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.