தெற்கு சீனாவின் ஷாந்தோ நகரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது தீ நேற்று இரவு 9:20 மணியளவில் ஏற்பட்டதுடன், 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம், ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 160 ஆக உயர்ந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் காரணமாக, சீனா நாடு முழுவதும் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் தீ பாதுகாப்பு நிலைகளை முழுமையாக ஆய்வு செய்வதாக சீனா கடந்த மாதம் அறிவித்தது .
சீனாவில் அண்மை காலமாக பல தீ விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் ஏப்ரல் மாதம் ஹெபேயில் உள்ள ஒரு முதியோர் இல்லத் தீயில் 20 பேர் உயிரிழந்தனர்; அதே மாதம் வடகிழக்கு சீனாவில் ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தெற்கு சீனாவின் ஷாந்தோவில் குடியிருப்பு தீ விபத்து- 12 பேர் உயிரிழப்பு தெற்கு சீனாவின் ஷாந்தோ நகரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.குறித்த சம்பவத்தின் போது தீ நேற்று இரவு 9:20 மணியளவில் ஏற்பட்டதுடன், 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம், ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 160 ஆக உயர்ந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் காரணமாக, சீனா நாடு முழுவதும் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் தீ பாதுகாப்பு நிலைகளை முழுமையாக ஆய்வு செய்வதாக சீனா கடந்த மாதம் அறிவித்தது .சீனாவில் அண்மை காலமாக பல தீ விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் ஏப்ரல் மாதம் ஹெபேயில் உள்ள ஒரு முதியோர் இல்லத் தீயில் 20 பேர் உயிரிழந்தனர்; அதே மாதம் வடகிழக்கு சீனாவில் ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.