வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். இதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் வவுனியா மேல்நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மனுதாரர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் மூன்று இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தது.
அதன்படி, காண்டீபனை மாநகர முதல்வர் அல்லது மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது.
மேலும், அந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் எதிர்மனுதாரர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அத்துடன், காண்டீபனுக்குப் பதிலாக மற்றொருவரை மாநகர முதல்வராக தெரிவுசெய்வதற்கோ அல்லது நியமிப்பதற்கோ, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை உறுப்பினராக தெரிவுசெய்வதற்கோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இடைக்காலத் தடையுத்தரவுகளை தொடர்ந்து நீடிப்பதா அல்லது அவற்றை நீக்குவதா என்பது தொடர்பில் கடந்த தவணைகளில் இருதரப்பினராலும் நீண்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இருதரப்பினரும் தமது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இருதரப்பு சார்பிலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவை தொடர்பான கட்டளை இன்று வழங்கப்பட்டது.
இதன்போது, மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு நிறைவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.மனுதாரர் காண்டீபன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இ. தயாபரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்: ஆளுநரின் வர்த்தமானிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.வடமாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். இதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் வவுனியா மேல்நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.மனுதாரர் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் மூன்று இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தது.அதன்படி, காண்டீபனை மாநகர முதல்வர் அல்லது மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது.மேலும், அந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் எதிர்மனுதாரர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.அத்துடன், காண்டீபனுக்குப் பதிலாக மற்றொருவரை மாநகர முதல்வராக தெரிவுசெய்வதற்கோ அல்லது நியமிப்பதற்கோ, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை உறுப்பினராக தெரிவுசெய்வதற்கோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த இடைக்காலத் தடையுத்தரவுகளை தொடர்ந்து நீடிப்பதா அல்லது அவற்றை நீக்குவதா என்பது தொடர்பில் கடந்த தவணைகளில் இருதரப்பினராலும் நீண்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இதனையடுத்து, இருதரப்பினரும் தமது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, இருதரப்பு சார்பிலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவை தொடர்பான கட்டளை இன்று வழங்கப்பட்டது.இதன்போது, மாநகர முதல்வர் காண்டீபனை பதவிநீக்கம் செய்து வடமாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான இடைக்காலத் தடையுத்தரவுகளை, வழக்கு நிறைவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.மனுதாரர் காண்டீபன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இ. தயாபரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.