• May 28 2026

மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்த பிரதேச மட்ட கலந்துரையாடல்!

Ziya / May 27th 2026, 3:38 pm
image

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழு கூட்டம் இன்று (27)  புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் இடம்பெற்றது.


தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு கந்தவனம் சதிசேகரன் அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் இதன்போது இடம் பெற்றன.


சமூக சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவும் சுய உதவி குழுவை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. மேலும் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய நலத் திட்டங்கள் தொடர்பிலும் சமூக பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அன்ஜனா விரிவான தெளிவூட்டல்களை வழங்கினார்.


இதில் சமூக சேவைகள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட செயலக மாவட்ட உத்தியோகத்தர் த. பிரணவன் மற்றும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.


மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்த பிரதேச மட்ட கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழு கூட்டம் இன்று (27)  புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் இடம்பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு கந்தவனம் சதிசேகரன் அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் இதன்போது இடம் பெற்றன.சமூக சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவும் சுய உதவி குழுவை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. மேலும் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய நலத் திட்டங்கள் தொடர்பிலும் சமூக பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அன்ஜனா விரிவான தெளிவூட்டல்களை வழங்கினார்.இதில் சமூக சேவைகள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட செயலக மாவட்ட உத்தியோகத்தர் த. பிரணவன் மற்றும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement