ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு, கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுழியோடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம், 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி வெற்றிகரமாக மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
P 4447 படகினை மீட்பது குறித்த நடவடிக்கையின் இறுதி கட்டமாக இருந்ததுடன், முதல் கட்டமாக 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி P 4447 படகு விபத்துக்குள்ளானதால் பாதிக்கப் பட்ட அப்படகின் பணியாளர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கை கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் அங்குலானை பகுதி மீனவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையானது பணியாளர்களில் பதினொரு பேரை (11) மீட்டமை மற்றும் விபத்து காரணமாக காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாயின் சடலத்தை 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி மீட்டெடுத்ததுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதற்கமைய, இறுதி கட்டமாக, கடற்படை சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால், நிலவிய கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் நீருக்கடியில் உள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில் படிப்படியாகவும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுத்தப்பட்ட நீண்ட மற்றும் சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர், கடல் மட்டத்திற்கு கீழ் சுமார் 80 அடி ஆழத்தில் இருந்த P 4447 வேகத் தாக்குதல் படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
கடற்படையின் தொழில்முறைத் தன்மை, தொழிநுட்பத் திறமை மற்றும் அனைத்துப் பொறியியல் தொழிநுட்பப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு ஊடாகப் பெற்ற சிறந்த வெற்றியாக குறிப்பிடத்தக்க P 4447 மீட்பு நடவடிக்கையின் போது, கடற்படை கடல்சார் பொறியியல், படகு உடல் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட தொழிநுட்பப் பிரிவுகள் மற்றும் சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால் தமது நிபுணத்துவ அறிவு, தொழிநுட்பத் திறன்கள் மற்றும் செயற்பாட்டு அனுபவங்களைப் பயன்படுத்தி படகு கடலின் அடியிலிருந்து படிப்படியாக மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனத்தின் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ பங்களிப்பும் சிறப்பான ஆதரவாக அமைந்தது.
விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு, கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுழியோடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம், 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி வெற்றிகரமாக மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.P 4447 படகினை மீட்பது குறித்த நடவடிக்கையின் இறுதி கட்டமாக இருந்ததுடன், முதல் கட்டமாக 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி P 4447 படகு விபத்துக்குள்ளானதால் பாதிக்கப் பட்ட அப்படகின் பணியாளர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கை கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் அங்குலானை பகுதி மீனவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது பணியாளர்களில் பதினொரு பேரை (11) மீட்டமை மற்றும் விபத்து காரணமாக காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாயின் சடலத்தை 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி மீட்டெடுத்ததுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.இதற்கமைய, இறுதி கட்டமாக, கடற்படை சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால், நிலவிய கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் நீருக்கடியில் உள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில் படிப்படியாகவும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுத்தப்பட்ட நீண்ட மற்றும் சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர், கடல் மட்டத்திற்கு கீழ் சுமார் 80 அடி ஆழத்தில் இருந்த P 4447 வேகத் தாக்குதல் படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது. கடற்படையின் தொழில்முறைத் தன்மை, தொழிநுட்பத் திறமை மற்றும் அனைத்துப் பொறியியல் தொழிநுட்பப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு ஊடாகப் பெற்ற சிறந்த வெற்றியாக குறிப்பிடத்தக்க P 4447 மீட்பு நடவடிக்கையின் போது, கடற்படை கடல்சார் பொறியியல், படகு உடல் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட தொழிநுட்பப் பிரிவுகள் மற்றும் சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால் தமது நிபுணத்துவ அறிவு, தொழிநுட்பத் திறன்கள் மற்றும் செயற்பாட்டு அனுபவங்களைப் பயன்படுத்தி படகு கடலின் அடியிலிருந்து படிப்படியாக மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனத்தின் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ பங்களிப்பும் சிறப்பான ஆதரவாக அமைந்தது.