• Jul 21 2025

மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்பு; தமிழர் பகுதியில் தொடரும் அவலம்

Chithra / Jul 20th 2025, 4:06 pm
image

 

திருகோணமலை, சம்பூர் கடற்கரைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் -சிறுவர் பூங்காவை அண்டிய கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதியிலிருந்து மெக் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மூன்றாவது நாளாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மனித மண்டையோடு ஒன்றும் கால் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மெக் நிறுவனத்தினால் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மிதிவெடி அகற்றும் பணி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்பு; தமிழர் பகுதியில் தொடரும் அவலம்  திருகோணமலை, சம்பூர் கடற்கரைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பூர் -சிறுவர் பூங்காவை அண்டிய கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதியிலிருந்து மெக் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மூன்றாவது நாளாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மனித மண்டையோடு ஒன்றும் கால் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மெக் நிறுவனத்தினால் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மிதிவெடி அகற்றும் பணி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement