கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாபாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகொன்று இன்று (17) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய, அந்த நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 1,800 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 44 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு - மூன்று மாதங்களில் 10 படகுகள் சுற்றிவளைப்பு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாபாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். இதேவேளை இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகொன்று இன்று (17) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக சம்பத் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, அந்த நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 1,800 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 44 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.