• May 20 2026

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Chithra / May 20th 2026, 8:43 pm
image

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த, துருப்பிடித்த நிலையிலான 5 மோட்டார் குண்டுகள் இன்று (20) மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போதே இக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக இவை நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இக்குண்டுகள் மீட்கப்பட்ட கஞ்சிகுடியாறு பகுதியானது, கடந்த கால உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் காணப்பட்டதுடன், அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்டுள்ள மோட்டார் குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன், மீட்கப்பட்ட குண்டுகளைப் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு (STF) அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த, துருப்பிடித்த நிலையிலான 5 மோட்டார் குண்டுகள் இன்று (20) மீட்கப்பட்டுள்ளன.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போதே இக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக இவை நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.இக்குண்டுகள் மீட்கப்பட்ட கஞ்சிகுடியாறு பகுதியானது, கடந்த கால உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் காணப்பட்டதுடன், அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மீட்கப்பட்டுள்ள மோட்டார் குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மீட்கப்பட்ட குண்டுகளைப் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு (STF) அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement