• Aug 23 2026

'சமிட்புர சது' வழங்கிய தகவலால் வெல்லம்பிட்டியவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

Chithra / Aug 22nd 2026, 10:29 am
image


தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சமிட்புர சது என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேகநபர் திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 

வெல்லம்பிட்டிய – சேதவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்றை விசாரணை அதிகாரிகள் நேற்று (21) கைப்பற்றியுள்ளனர்.


28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ரிவோல்வர் மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன.


சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


'சமிட்புர சது' வழங்கிய தகவலால் வெல்லம்பிட்டியவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சமிட்புர சது என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேகநபர் திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய – சேதவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்றை விசாரணை அதிகாரிகள் நேற்று (21) கைப்பற்றியுள்ளனர்.28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ரிவோல்வர் மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன.சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement