முல்லைத்தீவு - விசுவமடு, வள்ளுவர்புரம் பாரதி மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அந்தவைகையில் பாடசாலை வளாகத்தில் காணப்படும் ஆபத்தான பழைய கட்டடங்கள் இடித்தழிக்கப்படுவது தொடர்பிலும், பாதிப்பபடைந்துள்ள கட்டடங்களைச் சீரமைப்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு 13.5ஏக்கர் படசாலைக்காணிக்கு சுற்றுவேலி அமைப்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
அதேவேளை பாடசாலை வளாகத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற மற்றும் பாவனைமற்ற கிணறுகளை பாதுகாப்பான விதத்திலும்,பாவனைக்கேற்ற விதத்திலும் சீரமைக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு 620மாணவர்களையுடைய குறித்த பாடசாலையில் ஆசிரிய ஆளணி மற்றும் சிற்றூழியர் ஆளணி உள்ளடங்கலாக மொத்தம் 55ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணிகள் காணப்படுகின்றபோதும், தற்போது 39ஆளணிகளே காணப்படுவதாகவும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.
குறிப்பாக உயர்தர ஆசிரிய ஆளணியில் 09ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அந்தவகையில் கணிதப்பிரிவிற்கு மூன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணி இருந்தும் ஒரு ஆசிரியரே இருப்பதாகவும், அதேபோல் விஞ்ஞானப்பிரிவிற்கும் மூன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணியில் ஒரு ஆசிரியரே கடமையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை சித்திரம், புவியியல், கிறிஸ்தவநாகரீகம், பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
அத்தோடு குறித்த பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் 242மாணவர்கள் கல்விகற்றுவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், ஆரம்பப்பிரிவை தனியாக கொண்டுவருவது தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேவேளை சிற்றுண்டிச்சாலைக்குரிய கட்டட வசதிகளின்மையால், சிற்றுண்டிச்சாலை வகுப்பறைக் கட்டடமொன்றில் இயங்கிவருகின்றமை தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
அத்தோடு கழிப்பறைகளின் சீரமைப்பு, மைதானச் சீரமைப்பு, வகுப்பறைகளின் கூரைச் சீரமைப்பு, ஜன்னல்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் ஆகியோரும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வள்ளுவர்பும் பாரதி மகா வித்தியாலத்திற்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; வளப்பற்றாகுறைகள் தொடர்பில் ஆராய்வு முல்லைத்தீவு - விசுவமடு, வள்ளுவர்புரம் பாரதி மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.அந்தவைகையில் பாடசாலை வளாகத்தில் காணப்படும் ஆபத்தான பழைய கட்டடங்கள் இடித்தழிக்கப்படுவது தொடர்பிலும், பாதிப்பபடைந்துள்ள கட்டடங்களைச் சீரமைப்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அத்தோடு 13.5ஏக்கர் படசாலைக்காணிக்கு சுற்றுவேலி அமைப்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.அதேவேளை பாடசாலை வளாகத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற மற்றும் பாவனைமற்ற கிணறுகளை பாதுகாப்பான விதத்திலும்,பாவனைக்கேற்ற விதத்திலும் சீரமைக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.அத்தோடு 620மாணவர்களையுடைய குறித்த பாடசாலையில் ஆசிரிய ஆளணி மற்றும் சிற்றூழியர் ஆளணி உள்ளடங்கலாக மொத்தம் 55ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணிகள் காணப்படுகின்றபோதும், தற்போது 39ஆளணிகளே காணப்படுவதாகவும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.குறிப்பாக உயர்தர ஆசிரிய ஆளணியில் 09ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.அந்தவகையில் கணிதப்பிரிவிற்கு மூன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணி இருந்தும் ஒரு ஆசிரியரே இருப்பதாகவும், அதேபோல் விஞ்ஞானப்பிரிவிற்கும் மூன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணியில் ஒரு ஆசிரியரே கடமையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.அதேவேளை சித்திரம், புவியியல், கிறிஸ்தவநாகரீகம், பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.அத்தோடு குறித்த பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் 242மாணவர்கள் கல்விகற்றுவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், ஆரம்பப்பிரிவை தனியாக கொண்டுவருவது தொடர்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேவேளை சிற்றுண்டிச்சாலைக்குரிய கட்டட வசதிகளின்மையால், சிற்றுண்டிச்சாலை வகுப்பறைக் கட்டடமொன்றில் இயங்கிவருகின்றமை தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.அத்தோடு கழிப்பறைகளின் சீரமைப்பு, மைதானச் சீரமைப்பு, வகுப்பறைகளின் கூரைச் சீரமைப்பு, ஜன்னல்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் ஆகியோரும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.