• Apr 25 2026

பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; வளப்பற்றாக்குறைகள் ஆராய்வு!

Ziya / Apr 25th 2026, 3:25 pm
image

முல்லைத்தீவு - துணுக்காய் வலயக்கல்விப்பணிமனையில், மாந்தை கிழக்கு கோட்டக்கல்விப் பணிமனையின் கீழுள்ள பாலிநகர் மாகா வித்தியாலயத்திற்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.


அந்தவகையில் 402 மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு 38 ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணி உள்ள போதும், தற்போது 29ஆசிரியர்களே கடமையாற்றிவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


அத்தோடு வெளிமாவட்டத்திலிருந்து வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் தங்குவதற்கான விடுதிகள் இல்லாதநிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், விடுதிகளை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதேவேளை பாடாசாலையில்  210அடி நீளமானதும், 25அடி அகலமானதுமான 60ஆண்டுகள் பழமையான பிரதான மண்டபம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், குறித்த பிரதான மண்டபத்தினைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதுதவிர ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையைச் சீர்செய்தல், சுற்றுவேலியைச் சீரமைத்தல், பாடசாலைக்கட்டடங்களின் பாதிக்கப்பட்ட கூரைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.


அந்தவகையில் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் எழுத்துமூலமாக கோரிக்கைகளை தம்மிடம் கையளிக்குமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.


பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; வளப்பற்றாக்குறைகள் ஆராய்வு முல்லைத்தீவு - துணுக்காய் வலயக்கல்விப்பணிமனையில், மாந்தை கிழக்கு கோட்டக்கல்விப் பணிமனையின் கீழுள்ள பாலிநகர் மாகா வித்தியாலயத்திற்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.அந்தவகையில் 402 மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு 38 ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணி உள்ள போதும், தற்போது 29ஆசிரியர்களே கடமையாற்றிவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அத்தோடு வெளிமாவட்டத்திலிருந்து வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் தங்குவதற்கான விடுதிகள் இல்லாதநிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், விடுதிகளை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேவேளை பாடாசாலையில்  210அடி நீளமானதும், 25அடி அகலமானதுமான 60ஆண்டுகள் பழமையான பிரதான மண்டபம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், குறித்த பிரதான மண்டபத்தினைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுதவிர ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையைச் சீர்செய்தல், சுற்றுவேலியைச் சீரமைத்தல், பாடசாலைக்கட்டடங்களின் பாதிக்கப்பட்ட கூரைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.அந்தவகையில் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் எழுத்துமூலமாக கோரிக்கைகளை தம்மிடம் கையளிக்குமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement