• May 04 2026

வடகிழக்கில் 04ம் திகதி வரை மழை தொடரும்; வான்பாயும் குளங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Feb 1st 2026, 11:37 am
image


இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை  தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அவர் இன்று  வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்  


இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை நாளையும், நாளை மறுதினமும்  எதிர்வரும் 04 ஆம் திகதியும்  தொடரும் வாய்ப்புள்ளது. 


அதேவேளை இந்த மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவா மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும்  04 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. 


வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன.


மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும்04 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம். 


எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் (எதிர்வரும் 04.02.2026 வரை) இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.


விதைப்புக்காலத்தின் சீரற்ற மழை, டிட்வா புயல் மற்றும் வெள்ளம், நோய்கள் , குறைவான சந்தை விலை போன்ற பல நெருக்கடிகளில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உங்கள் நெல் அறுவடையையும் நெல் உலர விடும் செயற்பாட்டினையும் திட்டமிட்டு  மேற்கொண்டு அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார். 


வடகிழக்கில் 04ம் திகதி வரை மழை தொடரும்; வான்பாயும் குளங்கள் மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை  தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் இன்று  வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்  இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை நாளையும், நாளை மறுதினமும்  எதிர்வரும் 04 ஆம் திகதியும்  தொடரும் வாய்ப்புள்ளது. அதேவேளை இந்த மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவா மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும்  04 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன.மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும்04 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் (எதிர்வரும் 04.02.2026 வரை) இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.விதைப்புக்காலத்தின் சீரற்ற மழை, டிட்வா புயல் மற்றும் வெள்ளம், நோய்கள் , குறைவான சந்தை விலை போன்ற பல நெருக்கடிகளில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உங்கள் நெல் அறுவடையையும் நெல் உலர விடும் செயற்பாட்டினையும் திட்டமிட்டு  மேற்கொண்டு அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அறிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement