நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த மழை நிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100mm-க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிக வெப்பநிலை உணரப்படும்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
கடல் பகுதிகளில் மணிக்கு 25 முதல் 35 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும். வெளியான வானிலை அறிக்கை நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த மழை நிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100mm-க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.அதே நேரத்தில் கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிக வெப்பநிலை உணரப்படும்.மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.கடல் பகுதிகளில் மணிக்கு 25 முதல் 35 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.