நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் இதுவரை சுமார் 35 சிறிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன,
இந்தச் சம்பவங்கள் சிறிய அளவிலானவையாக இருந்தபோதிலும், தொடர்ச்சியான மழைவீழ்ச்சிக்கு மத்தியில் அவை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரித்தார்.
கடந்த மூன்று நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதாகவும், மழையின் தீவிரம் மேலும் தொடருமானால் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறக்கம் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் உள்ளிட்ட நில சீர்குலைவு அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை பாரிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சிறிய அளவிலான சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் 14 மாவட்டங்கள் மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சியின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிரேஷ்ட புவியியலாளர் எச்சரித்துள்ளார்.
மண்சரிவு எச்சரிக்கைகள் பிராந்திய ரீதியாக வெளியிடப்படுவதால், மக்கள் தத்தமது பகுதிகளுக்கு வழங்கப்படும் எச்சரிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, முன்னதாகவே பிரதேச செயலகங்களினால் அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள மக்கள், அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை கிங் கங்கையின் நீரேந்துப் பகுதி மற்றும் களு கங்கையின் குடா கங்கைக்கான துணை நீரேந்துப் பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
300 மி.மீ-ஐத் தாண்டிய மழை; 35 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவு - தொடரும் ஆபத்து நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் இதுவரை சுமார் 35 சிறிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன, இந்தச் சம்பவங்கள் சிறிய அளவிலானவையாக இருந்தபோதிலும், தொடர்ச்சியான மழைவீழ்ச்சிக்கு மத்தியில் அவை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரித்தார்.கடந்த மூன்று நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதாகவும், மழையின் தீவிரம் மேலும் தொடருமானால் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறக்கம் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் உள்ளிட்ட நில சீர்குலைவு அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.இதுவரை பாரிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சிறிய அளவிலான சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டின் 14 மாவட்டங்கள் மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழைவீழ்ச்சியின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிரேஷ்ட புவியியலாளர் எச்சரித்துள்ளார்.மண்சரிவு எச்சரிக்கைகள் பிராந்திய ரீதியாக வெளியிடப்படுவதால், மக்கள் தத்தமது பகுதிகளுக்கு வழங்கப்படும் எச்சரிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, முன்னதாகவே பிரதேச செயலகங்களினால் அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள மக்கள், அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை கிங் கங்கையின் நீரேந்துப் பகுதி மற்றும் களு கங்கையின் குடா கங்கைக்கான துணை நீரேந்துப் பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.அத்துடன், ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.