• Mar 14 2026

காடாக மாறும் தண்டவாளங்கள்: மலையகத்தில் முடங்கிய ரயில் சேவைகள்

Chithra / Feb 10th 2026, 7:42 pm
image

 

டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக மலையக ரயில் மார்க்கத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தினால், பல இடங்களில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பராமரிப்பின்றி காணப்படும் தண்டவாளங்கள் தற்போது பற்றைக் காடுகளாக மாறி வருகின்றன,

தற்போது அபேவெல - பதுளை மற்றும் நாவலப்பிட்டி - வட்டவளை ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ரம்புக்கணை முதல் நாவலப்பிட்டி வரையிலும், அபேவெல முதல் நானுஓயா வரையிலுமான தண்டவாள பகுதிகளில் தொடருந்து பொறியியலாளர்களும் தொழிலாளர்களும் தற்போது சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையக பிரதான ரயில் பாதையிலான போக்குவரத்து 75 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனால் ரயில் மட்டுமே பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கொண்ட கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தமது அன்றாட வருமானத்தில் பெரும் பகுதியை போக்குவரத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நானுஓயா முதல் அபேவெல வரையிலான தொடருந்து பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், நானுஓயாவில் தரித்து நிற்கும் தொடருந்து இயந்திரங்களை பயன்படுத்தி, நானுஓயா முதல் பதுளை வரையான ரயில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை  டித்வா  சூறாவளிப் பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேரிடர் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதால், தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளின்படி மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் தேவையற்றவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கையில்

தற்போது வரை 173 பேர் காணாமல் போயுள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் இப்போதைக்கு 'இறந்தவர்களாக' அறிவிக்கப்பட மாட்டார்கள். இந்த நடைமுறை 2004 சுனாமிப் பேரிடரைப் போன்றதே. சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட பலி எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை கொள்கை ரீதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6,431 பேர் இன்னும் தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.45,056 குடும்பங்களைச் சேர்ந்த 155,255 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீள்நிர்மாணப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காடாக மாறும் தண்டவாளங்கள்: மலையகத்தில் முடங்கிய ரயில் சேவைகள்  டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக மலையக ரயில் மார்க்கத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தினால், பல இடங்களில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இதனால் பராமரிப்பின்றி காணப்படும் தண்டவாளங்கள் தற்போது பற்றைக் காடுகளாக மாறி வருகின்றன,தற்போது அபேவெல - பதுளை மற்றும் நாவலப்பிட்டி - வட்டவளை ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.ரம்புக்கணை முதல் நாவலப்பிட்டி வரையிலும், அபேவெல முதல் நானுஓயா வரையிலுமான தண்டவாள பகுதிகளில் தொடருந்து பொறியியலாளர்களும் தொழிலாளர்களும் தற்போது சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மலையக பிரதான ரயில் பாதையிலான போக்குவரத்து 75 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.இதனால் ரயில் மட்டுமே பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கொண்ட கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.தமது அன்றாட வருமானத்தில் பெரும் பகுதியை போக்குவரத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.நானுஓயா முதல் அபேவெல வரையிலான தொடருந்து பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், நானுஓயாவில் தரித்து நிற்கும் தொடருந்து இயந்திரங்களை பயன்படுத்தி, நானுஓயா முதல் பதுளை வரையான ரயில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை  டித்வா  சூறாவளிப் பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பேரிடர் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதால், தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளின்படி மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் தேவையற்றவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கையில்தற்போது வரை 173 பேர் காணாமல் போயுள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் இப்போதைக்கு 'இறந்தவர்களாக' அறிவிக்கப்பட மாட்டார்கள். இந்த நடைமுறை 2004 சுனாமிப் பேரிடரைப் போன்றதே. சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட பலி எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை கொள்கை ரீதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.6,431 பேர் இன்னும் தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.45,056 குடும்பங்களைச் சேர்ந்த 155,255 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீள்நிர்மாணப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement