• Feb 14 2026

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து பெண்கள் கைது!

Chithra / Feb 13th 2026, 10:39 am
image

 கொழும்பு - வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


சந்தேக நபர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: தாய்லாந்து பெண்கள் கைது  கொழும்பு - வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.சந்தேக நபர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement