அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில், எவ்வித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்தக் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தி, நேற்றுமுன்தினம் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
நிலைமையைக் கேட்டறிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்தனர்.
மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அதிகாரிகள், குறித்த கல்குவாரியானது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அது உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இது தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதேச செயலாளர், "இந்த இடமானது குளத்துக்குச் சொந்தமான அரச காணி என்பதால், அங்கு எவ்விதமான கட்டுமானங்களையும் முன்னெடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த கல்குவாரிக்கு எவ்விதமான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இறுதியில், இந்தக் கல்குவாரியால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதனை அவ்விடத்திலிருந்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலை தணிவுக்கு வந்தது.
அனுமதியின்றி கல்குவாரியா கிளர்ந்தெழுந்த நேருபுரம் மக்கள் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில், எவ்வித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இந்தக் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தி, நேற்றுமுன்தினம் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.நிலைமையைக் கேட்டறிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் சு.சசிகுமார் மற்றும் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்தனர்.மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்த அதிகாரிகள், குறித்த கல்குவாரியானது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தியதுடன், அது உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.இது தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதேச செயலாளர், "இந்த இடமானது குளத்துக்குச் சொந்தமான அரச காணி என்பதால், அங்கு எவ்விதமான கட்டுமானங்களையும் முன்னெடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த கல்குவாரிக்கு எவ்விதமான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இறுதியில், இந்தக் கல்குவாரியால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதனை அவ்விடத்திலிருந்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலை தணிவுக்கு வந்தது.