சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் நீண்டகாலமாக பூசணி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர், அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்.
பல இலட்சம் ரூபாய் செலவில் பராமரிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த பூசணித் தோட்டங்கள்,
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
நீண்ட நாட்கள் வெள்ளநீர் தேங்கியதால் பூசணிக்காய்கள் செடி அழுகி, விளைச்சல் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தரிக்காய் மற்றும் பூசணிக்காய் என இரண்டு ஏக்கரில் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் விவசாயம் செய்ததாகவும், தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் விவசாயி கூறினார்.
பாதிக்கப்பட்ட தமக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மனிதநேய உள்ளங்களும் உதவ முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கிய பூசணித் தோட்டங்கள்; பல இலட்சம் ரூபாய் நஷ்டம் விவசாயி கவலை சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் நீண்டகாலமாக பூசணி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர், அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்.பல இலட்சம் ரூபாய் செலவில் பராமரிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த பூசணித் தோட்டங்கள், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. நீண்ட நாட்கள் வெள்ளநீர் தேங்கியதால் பூசணிக்காய்கள் செடி அழுகி, விளைச்சல் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கத்தரிக்காய் மற்றும் பூசணிக்காய் என இரண்டு ஏக்கரில் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் விவசாயம் செய்ததாகவும், தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் விவசாயி கூறினார். பாதிக்கப்பட்ட தமக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மனிதநேய உள்ளங்களும் உதவ முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.