• Apr 28 2026

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் மும்முரம்

Chithra / Feb 3rd 2026, 11:40 am
image


 

அம்பாறை மாவட்டத்தில்  78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள்  விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நாளை (04)  நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, சவளக்கடை , சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்,அட்டப்பளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் இவ்வாறு  ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.


அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன்  பொதுமக்கள்  அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.


மேலும் பொலிஸ் நிலையங்கள், வங்கிகள், பிரதேச செயலகங்கள், பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.


சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில்  பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.


இதே வேளை  மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில்  நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல்  தலைமையில் சுதந்திர தின விழாவையொட்டி  விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதே போன்று கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு தன்சல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அத்துடன் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தலைமையில் அக்கரைப்பற்று பகுதியில்  சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதேவேளை  இலங்கையின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அல்லைநகர் மேற்கு அரச பல் சேவை கட்டட வளாகம் இன்று (03) சிரமதான மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.


மூதூர் பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைவாக  கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புகளுடன் இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.


இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் மும்முரம்  அம்பாறை மாவட்டத்தில்  78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள்  விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாளை (04)  நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, சவளக்கடை , சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்,அட்டப்பளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் இவ்வாறு  ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன்  பொதுமக்கள்  அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.மேலும் பொலிஸ் நிலையங்கள், வங்கிகள், பிரதேச செயலகங்கள், பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில்  பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.இதே வேளை  மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில்  நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல்  தலைமையில் சுதந்திர தின விழாவையொட்டி  விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதே போன்று கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு தன்சல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தலைமையில் அக்கரைப்பற்று பகுதியில்  சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை  இலங்கையின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அல்லைநகர் மேற்கு அரச பல் சேவை கட்டட வளாகம் இன்று (03) சிரமதான மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.மூதூர் பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைவாக  கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புகளுடன் இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement