யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகளவான இறால் பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலால் மீனவர்களது வருமானம் கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களின் வலையில் அகப்பட்டு வருகின்றன.
பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு மீனவர்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ள போதும் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளது என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடமராட்சி கடலில் அதிகளவாக அகப்படும் இறால்; இழுவைமடி அத்துமீறலால் கேள்விக்குறியாகும் வருமானம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகளவான இறால் பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலால் மீனவர்களது வருமானம் கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களின் வலையில் அகப்பட்டு வருகின்றன. பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர். வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு மீனவர்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ள போதும் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளது என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.