• Nov 12 2025

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! பீதியில் உறைந்த மக்கள்

Chithra / Oct 10th 2025, 9:21 am
image


பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு பீதியில் உறைந்த மக்கள் பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 அடி வரை சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement