• Aug 23 2025

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

Chithra / Aug 22nd 2025, 8:30 am
image

 

பொலிஸ்மா அதிபர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று கூறும் ஒரு போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்தக் கடிதம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே ஒன்லைனில் பரப்பப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை உருவாக்கிப் பகிர்ந்ததற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய கணினி குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

எனவே, சமூக தளங்களில் பகிரப்படும் அதிகாரப்பூர்வமற்ற விடயங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் அனைத்து அதிகாரப்பூர்வ பொலிஸ் தகவல்தொடர்புகளும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை  பொலிஸ்மா அதிபர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று கூறும் ஒரு போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்தக் கடிதம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே ஒன்லைனில் பரப்பப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதனை உருவாக்கிப் பகிர்ந்ததற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய கணினி குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.எனவே, சமூக தளங்களில் பகிரப்படும் அதிகாரப்பூர்வமற்ற விடயங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர்.மேலும் அனைத்து அதிகாரப்பூர்வ பொலிஸ் தகவல்தொடர்புகளும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement