• Apr 30 2026

போர்க்களமாக மாறிய பொலிஸ் நிலையம் - பெண் உத்தியோகத்தர்களின் சண்டையால் பதற்றம்

Chithra / Apr 30th 2026, 8:01 am
image

பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பொலன்னறுவை - மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது. 


சக பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் பெற்ற கடனைத் திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


ஆரம்பத்தில் வாய்த்தர்க்கமாகத் தொடங்கிய இந்த விவகாரம், பின்னர் மோதலில் முடிந்துள்ளது.


இந்தக் கடுமையான மோதலில் காயமடைந்த இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக மீட்கப்பட்டு,  மின்னேரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சீருடையில் இருக்கும்போது பொலிஸ் நிலையத்தினுள்ளேயே இவ்வாறான அநாகரீகமான செயலில் ஈடுபட்டதைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உடனடியாகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையமே போர்க்களமாக மாறிய சம்பவம் பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

போர்க்களமாக மாறிய பொலிஸ் நிலையம் - பெண் உத்தியோகத்தர்களின் சண்டையால் பதற்றம் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் இரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பொலன்னறுவை - மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது. சக பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் பெற்ற கடனைத் திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய்த்தர்க்கமாகத் தொடங்கிய இந்த விவகாரம், பின்னர் மோதலில் முடிந்துள்ளது.இந்தக் கடுமையான மோதலில் காயமடைந்த இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக மீட்கப்பட்டு,  மின்னேரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சீருடையில் இருக்கும்போது பொலிஸ் நிலையத்தினுள்ளேயே இவ்வாறான அநாகரீகமான செயலில் ஈடுபட்டதைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உடனடியாகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையமே போர்க்களமாக மாறிய சம்பவம் பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement