மருத்துவமனையின் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் திடீரென்று மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார்.
அதனை அவதானித்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மருத்துவமனையே பதற்றமாகக் காணப்பட்ட நிலையில் இளைஞரை கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து மருத்துவமனையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனைடுத்து சம்பவம் தொடர்பில் தீயணைப்புத்துறைக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பெரும் முயற்சிக்குப் பின்னர் இளைஞரைப் பத்திரமாக மீட்டனர்.
குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது எதற்காக உயிர்மாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞரின் இந்த தீடீர் உயிர்மாய்ப்பு முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
மருத்துவமனை மாடியில் இருந்து உயிர்மாய்க்க முயன்ற இளைஞர்; விரைந்து காப்பாற்றிய பொலிஸார் - அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி மருத்துவமனையின் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மங்கலபுரி பகுதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இன்று இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென்று மருத்துவமனையின் மாடியில் இருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். அதனை அவதானித்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மருத்துவமனையே பதற்றமாகக் காணப்பட்ட நிலையில் இளைஞரை கீழே இறங்குமாறு வேண்டுகோள் வைத்து மருத்துவமனையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைடுத்து சம்பவம் தொடர்பில் தீயணைப்புத்துறைக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.தகவலையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பெரும் முயற்சிக்குப் பின்னர் இளைஞரைப் பத்திரமாக மீட்டனர்.குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது எதற்காக உயிர்மாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளைஞரின் இந்த தீடீர் உயிர்மாய்ப்பு முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.