• Apr 28 2026

பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்க பொலிஸாருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Chithra / Apr 27th 2026, 10:31 am
image

பேருந்துக்குள் பயணிகளின் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்க பொலிஸாருக்கு எவ்வித சட்டபூர்வமான அதிகாரமும் இல்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின்படி, இவ்வாறான சோதனைகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது.


அவர்கள் முன்னெடுக்கும் சோதனைகளின் போது மட்டுமே பொலிஸ் ஒத்துழைப்பு வழங்க முடியும்.


நேரடியாகத் தலையிட்டு பேருந்து உரிமையாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது பொலிஸாருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு நிலவி வருகின்றது. 


ஆனால் பொலிஸாரை ஏவிவிட்டு பேருந்து உரிமையாளர்களுடன் மோதலை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராகச் சுற்றறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்க பொலிஸ் முயற்சிப்பது தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு சில ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், சில்லறைப் பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றார்.


அனைத்துப் பேருந்து ஊழியர்களையும் இந்த குற்றச்சாட்டில் இணைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், பயணிகள் சரியான கட்டணத்தை அறிந்திருந்தால், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கச் சில்லறைப் பணத்தை எடுத்து வருவது சிறந்தது என அறிவுறுத்தியுள்ளார்.


அதேநேரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது அம்பாறை போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் சொகுசு பேருந்துகளில், பயணி ஒருவர் இடையில் இறங்கினாலும் அந்தப் பேருந்தின் இறுதித் தளம் வரையிலான முழுமையான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விதியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்க பொலிஸாருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை பேருந்துக்குள் பயணிகளின் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்க பொலிஸாருக்கு எவ்வித சட்டபூர்வமான அதிகாரமும் இல்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின்படி, இவ்வாறான சோதனைகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது.அவர்கள் முன்னெடுக்கும் சோதனைகளின் போது மட்டுமே பொலிஸ் ஒத்துழைப்பு வழங்க முடியும்.நேரடியாகத் தலையிட்டு பேருந்து உரிமையாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது பொலிஸாருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு நிலவி வருகின்றது. ஆனால் பொலிஸாரை ஏவிவிட்டு பேருந்து உரிமையாளர்களுடன் மோதலை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.மேலதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராகச் சுற்றறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்க பொலிஸ் முயற்சிப்பது தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஒரு சில ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், சில்லறைப் பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றார்.அனைத்துப் பேருந்து ஊழியர்களையும் இந்த குற்றச்சாட்டில் இணைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், பயணிகள் சரியான கட்டணத்தை அறிந்திருந்தால், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கச் சில்லறைப் பணத்தை எடுத்து வருவது சிறந்தது என அறிவுறுத்தியுள்ளார்.அதேநேரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது அம்பாறை போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் சொகுசு பேருந்துகளில், பயணி ஒருவர் இடையில் இறங்கினாலும் அந்தப் பேருந்தின் இறுதித் தளம் வரையிலான முழுமையான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விதியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement