• Mar 11 2026

இண்டிகோ விமானத்திற்குள் பறந்து திரிந்த புறா; பயணிகளின் தலைக்கு மேல் வட்டமடிக்கும் காட்சி!

shanu / Dec 9th 2025, 5:23 pm
image

பெங்களூரு-வதோதரா இண்டிகோ விமானத்தில் ஒரு புறா கேபினின் நடுவில் அங்குமிங்கும் பறந்து திரிந்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது. 


இந்தச் சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.   


ஓடுதளத்தில் இருந்து இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு  புறா  விமானத்திற்குள் நுழைந்துள்ளது. 


விமானத்திற்குள் நுழைந்த புறா, பயணிகளின் தலைக்கு மேல் அங்குமிங்கும் வட்டமடித்து பறந்து திரிந்தது. 


அதனைப் பிடிப்பதற்கு விமானக் குழு உறுப்பினர்கள்  முயன்றபோது பயணிகளின் தலைக்கு மேல் பறந்து திரிந்துள்ளது. 


இண்டிகோ விமானத்திற்குள் புறா நுழைந்து பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைலாகி வருகின்றது. 


இதேவேளை அண்மையில் அதிகாரிகள் பற்றாக்குறையால் இண்டிகோ விமானங்கள் ஏராளமானவை இரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். 


தற்போது விமானத்தில் புறா நுழைந்து பயணிகள் சிரமப்படுவது விமான நிறுவனத்தின் தற்போதைய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விமானத்திற்குள் பறந்து திரிந்த புறா; பயணிகளின் தலைக்கு மேல் வட்டமடிக்கும் காட்சி பெங்களூரு-வதோதரா இண்டிகோ விமானத்தில் ஒரு புறா கேபினின் நடுவில் அங்குமிங்கும் பறந்து திரிந்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.   ஓடுதளத்தில் இருந்து இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு  புறா  விமானத்திற்குள் நுழைந்துள்ளது. விமானத்திற்குள் நுழைந்த புறா, பயணிகளின் தலைக்கு மேல் அங்குமிங்கும் வட்டமடித்து பறந்து திரிந்தது. அதனைப் பிடிப்பதற்கு விமானக் குழு உறுப்பினர்கள்  முயன்றபோது பயணிகளின் தலைக்கு மேல் பறந்து திரிந்துள்ளது. இண்டிகோ விமானத்திற்குள் புறா நுழைந்து பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைலாகி வருகின்றது. இதேவேளை அண்மையில் அதிகாரிகள் பற்றாக்குறையால் இண்டிகோ விமானங்கள் ஏராளமானவை இரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தற்போது விமானத்தில் புறா நுழைந்து பயணிகள் சிரமப்படுவது விமான நிறுவனத்தின் தற்போதைய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement