• Aug 21 2025

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

Chithra / Aug 21st 2025, 9:26 am
image

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையம் 70 ரூபாய் விலை கொண்ட குடிநீர் போத்தலை 200 ரூபாவிற்கு விற்றுள்ளதுடன், 

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது அந்த வர்த்தக நிலையம் தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. 

குறித்த வர்த்தக நிலையத்தை கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) ஆகியவற்றின் கீழ் 200க்கு விற்பனை செய்வது குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம் கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் 70 ரூபாய் விலை கொண்ட குடிநீர் போத்தலை 200 ரூபாவிற்கு விற்றுள்ளதுடன், இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது அந்த வர்த்தக நிலையம் தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தை கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) ஆகியவற்றின் கீழ் 200க்கு விற்பனை செய்வது குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement