பருத்தித்துறை நகரசபையின் நகர தலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போலினால் இன்று (15) சமர்ப்பிக்கப்பட்டிருந்த பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஒரு மேலதீக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் (15) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகரதலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போல் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நகர தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்திருந்தனர்.
தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சபை அமர்வின் போது வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் சத்தியநாதன் கிஷோக்குமார் பதில் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் நிறைவு பருத்தித்துறை நகரசபையின் நகர தலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போலினால் இன்று (15) சமர்ப்பிக்கப்பட்டிருந்த பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஒரு மேலதீக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் (15) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகரதலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நகர தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்திருந்தனர். தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.இச்சபை அமர்வின் போது வல்வெட்டித்துறை நகரசபை செயலாளர் சத்தியநாதன் கிஷோக்குமார் பதில் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.