க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்தனர்.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமர் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் கபொத சாதாரண பரீட்சை இன்றைய தினம் எழுதி வருகின்றமை குறிப்பிடதக்கது
இதேவேளை அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு வலயத்தில் இருந்து 3231 பாடசாலை மாணவர்கள் தோற்றுவதோடு, 832 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை புத்தளம் மாவட்டம் உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் ஆர்வமாக செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று(17) பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வமாக பரீட்சை நிலையங்களுக்கு நேரகாலத்துடன் சமூகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.
முட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், பட்டிருப்பு வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், கல்குடாவ லயம், மட்டக்களப்பு மத்தி வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தினம் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு பரீட்சைகளுக்காக வருகைதந்ததை காணமுடிந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆண்டு 31 பரீட்சை நிலையங்கள் 3728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.
ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்டதன் பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
ஹட்டன் கல்வி வலயத்தில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு நிலவும் கடும் குளிர் மற்றும் பனி மூட்டமான காலநிலையையும் பொருட்படுத்தாது மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றுவதைக் இன்று காணக்கூடியதாக இருந்தது.
ஹட்டன் ஸ்ரீ பாத மத்திய மகா வித்தியாலயம், ஹைலண்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொகவந்தலாவ புனித மேரி தமிழ் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல நிலையங்களில் பரீட்சைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.
க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம் - ஆர்வத்துடன் சென்ற மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்தனர். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் சுமர் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் கபொத சாதாரண பரீட்சை இன்றைய தினம் எழுதி வருகின்றமை குறிப்பிடதக்கதுஇதேவேளை அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு வலயத்தில் இருந்து 3231 பாடசாலை மாணவர்கள் தோற்றுவதோடு, 832 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.மேலும் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை புத்தளம் மாவட்டம் உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் ஆர்வமாக செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று(17) பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வமாக பரீட்சை நிலையங்களுக்கு நேரகாலத்துடன் சமூகமளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.முட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், பட்டிருப்பு வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், கல்குடாவ லயம், மட்டக்களப்பு மத்தி வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.இன்றைய தினம் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு பரீட்சைகளுக்காக வருகைதந்ததை காணமுடிந்தது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆண்டு 31 பரீட்சை நிலையங்கள் 3728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.ஆலயங்களில் வழிபாடுகள் ஈடுபட்டதன் பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது.ஹட்டன் கல்வி வலயத்தில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு நிலவும் கடும் குளிர் மற்றும் பனி மூட்டமான காலநிலையையும் பொருட்படுத்தாது மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றுவதைக் இன்று காணக்கூடியதாக இருந்தது. ஹட்டன் ஸ்ரீ பாத மத்திய மகா வித்தியாலயம், ஹைலண்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொகவந்தலாவ புனித மேரி தமிழ் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல நிலையங்களில் பரீட்சைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.