• May 23 2026

மாவையின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் இரங்கல்!

Chithra / Jan 30th 2025, 9:42 am
image

 

மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (28) யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, நேற்றைய தினம் (29) தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்ற நிலையில், எதிர்கட்சி தலைவரும் தனது இரங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை  பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச்சடங்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


மாவையின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் இரங்கல்  மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (28) யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, நேற்றைய தினம் (29) தனது 82 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இந்தநிலையில், அவருக்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்ற நிலையில், எதிர்கட்சி தலைவரும் தனது இரங்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை  பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச்சடங்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement