• May 01 2026

அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் பாதை வளைவு திறப்பு!

shanu / Nov 5th 2025, 3:25 pm
image

அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிகைக்கு அமைவாக பாடசாலையின் பழைய மாணவர்களால் குறித்த வளைவு அமைத்துக் கொடுக்கப்பட்டது.


குறித்த வளைவினை பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், 


நாட்டில் தற்போது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமானது பலருக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. என்றும் போதையின் பிடியிலிருந்து நாட்டிலுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும் எனவும்குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும் அனைத்து சவால்களையும் கடந்து நாட்டினை வளமுள்ள சிறந்த பிரஜைகள் உள்ள நாடாக மாற்ற முன்வரவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணந்து

செயற்பட வேண்டும் என்றார்.


மேலும் பாடசாலை மாணவர்களின் எதிர்கல நலன் தொடர்பாகவும், அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றியும் எடுத்துக்கூறினார்.


பாடசாலையின் முதல்வர் இன்பநாதன் சுமித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் குமாரவேலு கண்ணதாசன், அச்சுவேலி உபபிரதேசசபை பொறுப்பதிகாரி சந்திரசேகரம் பகீரதன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் பாதை வளைவு திறப்பு அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிகைக்கு அமைவாக பாடசாலையின் பழைய மாணவர்களால் குறித்த வளைவு அமைத்துக் கொடுக்கப்பட்டது.குறித்த வளைவினை பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், நாட்டில் தற்போது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமானது பலருக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. என்றும் போதையின் பிடியிலிருந்து நாட்டிலுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும் எனவும்குறிப்பிட்டார்.எவ்வாறாயினும் அனைத்து சவால்களையும் கடந்து நாட்டினை வளமுள்ள சிறந்த பிரஜைகள் உள்ள நாடாக மாற்ற முன்வரவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணந்துசெயற்பட வேண்டும் என்றார்.மேலும் பாடசாலை மாணவர்களின் எதிர்கல நலன் தொடர்பாகவும், அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றியும் எடுத்துக்கூறினார்.பாடசாலையின் முதல்வர் இன்பநாதன் சுமித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் குமாரவேலு கண்ணதாசன், அச்சுவேலி உபபிரதேசசபை பொறுப்பதிகாரி சந்திரசேகரம் பகீரதன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement