• Apr 17 2026

இன்னும் 6 வாரம் தான்; ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் டிரம்ப்!

Ziya / Mar 21st 2026, 3:20 pm
image

மத்திய கிழக்கு போர்க்களத்தில் மிகப்பெரிய 'கிளைமாக்ஸ்' நெருங்கிவிட்டது.


ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' இராணுவ நடவடிக்கை இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். 


கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து வெள்ளை மாளிகை தெளிவான தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.


இந்த நிலையில், வொஷிங்டனில் இருந்து புளோரிடா நோக்கிப் பயணித்த போது தனது 'ட்ரூத் சோஷியல்' (TruthSocial) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஈரானின் இராணுவ வலிமையைச் சிதைப்பதிலும், அந்நாட்டின் அணு ஆயுத உற்பத்தித் திறனைப் பாதிப்புக்குள்ளாக்குவதிலும் அமெரிக்கா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார்.


இருப்பினும், ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கத் தரைப்படையினர் இறக்கப்படுவார்களா? என்பது குறித்து சர்வதேச ரீதியாக எழுப்பப்பட்டு வரும் கேள்விக்கு ட்ரம்ப் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.


வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், தரைப்படை நடவடிக்கை குறித்த அவரது மௌனம் பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்னும் 6 வாரம் தான்; ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் டிரம்ப் மத்திய கிழக்கு போர்க்களத்தில் மிகப்பெரிய 'கிளைமாக்ஸ்' நெருங்கிவிட்டது.ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' இராணுவ நடவடிக்கை இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து வெள்ளை மாளிகை தெளிவான தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.இந்த நிலையில், வொஷிங்டனில் இருந்து புளோரிடா நோக்கிப் பயணித்த போது தனது 'ட்ரூத் சோஷியல்' (TruthSocial) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஈரானின் இராணுவ வலிமையைச் சிதைப்பதிலும், அந்நாட்டின் அணு ஆயுத உற்பத்தித் திறனைப் பாதிப்புக்குள்ளாக்குவதிலும் அமெரிக்கா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார்.இருப்பினும், ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கத் தரைப்படையினர் இறக்கப்படுவார்களா என்பது குறித்து சர்வதேச ரீதியாக எழுப்பப்பட்டு வரும் கேள்விக்கு ட்ரம்ப் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், தரைப்படை நடவடிக்கை குறித்த அவரது மௌனம் பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement