கொழும்பு - காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
நுவரெலியா - டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரப் பகுதியில் இருவரும் நீராடிக்கொண்டிருந்தபோது அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
எனினும் அங்கிருந்த படகு ஒன்றின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவரும் மஹரகமவில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலில் மூழ்கிய இளைஞர்களில் ஒருவர் பலி; போர்ட் சிட்டி பகுதியில் நடந்த விபரீதம் கொழும்பு - காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.நுவரெலியா - டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று பிற்பகல் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரப் பகுதியில் இருவரும் நீராடிக்கொண்டிருந்தபோது அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.எனினும் அங்கிருந்த படகு ஒன்றின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.விபத்தில் சிக்கிய இருவரும் மஹரகமவில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.