• Aug 23 2025

தேர்தலில் மக்களுக்குள்ள தடைகள் - வடக்கில் கலந்துரையாடல்!

shanuja / Aug 22nd 2025, 7:32 pm
image

தேர்தலில் மக்களுக்குள்ள தடை தொடர்பாக ஆராயும்  கலந்துரையாடல்  கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று நடைபெற்றது.


தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 


குறித்த கலந்துரையாடலில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.


கலந்துரையாடலில் அவர் தெரிவிக்கையில், 

மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுவதாக இருந்தால் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா தேர்தல் நடாத்தப்படவேண்டும் என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். 


குறித்த கலந்துரையாடலில் மாற்று திறனாளிகள், சிவில் அமைப்புக்களைச்சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.

தேர்தலில் மக்களுக்குள்ள தடைகள் - வடக்கில் கலந்துரையாடல் தேர்தலில் மக்களுக்குள்ள தடை தொடர்பாக ஆராயும்  கலந்துரையாடல்  கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று நடைபெற்றது.தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.கலந்துரையாடலில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுவதாக இருந்தால் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா தேர்தல் நடாத்தப்படவேண்டும் என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மாற்று திறனாளிகள், சிவில் அமைப்புக்களைச்சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement