இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் முதலில் நட்பை உருவாக்குகின்றனர்.
பேஸ்புக் உரையாடலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை வாட்ஸ்அப் செயலிக்கு அழைத்துச் சென்று காணொளி (Video Call) அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.
அழைப்பின் போது நிர்வாணமான தோற்றத்தில் தோன்றும் மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவரின் முகத்தையும் சேர்த்து அக்காணொளியைப் பதிவு செய்கின்றனர். அல்லது 'டீப் பேக்' (Deepfake) தொழில்நுட்பம் மூலம் ஆபாச காணொளிகளை உருவாக்குகின்றனர்.
இக்காணொளிகளைப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி, இந்திய வங்கிக் கணக்குகளுக்குப் பெருந்தொகையான பணத்தை அனுப்புமாறு வற்புறுத்துகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போதும், அவர்கள் செய்யும் காணொளி அழைப்புகளை ஏற்கும்போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
இந்த மோசடியில் சாதாரண மக்கள் மட்டுமன்றி, சமூகத்தில் செல்வாக்கு மிக்க பல முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது போன்ற மிரட்டல்களுக்கு உள்ளானால், பயந்து பணத்தை அனுப்ப வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலங்கை சைபர் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் உலகில் அறிமுகமில்லாத நபர்களிடம் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உரையாடல்கள்
பேராபத்தை விளைவிக்கும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் நூதன பணப்பறிப்பு - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் முதலில் நட்பை உருவாக்குகின்றனர்.பேஸ்புக் உரையாடலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை வாட்ஸ்அப் செயலிக்கு அழைத்துச் சென்று காணொளி (Video Call) அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.அழைப்பின் போது நிர்வாணமான தோற்றத்தில் தோன்றும் மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவரின் முகத்தையும் சேர்த்து அக்காணொளியைப் பதிவு செய்கின்றனர். அல்லது 'டீப் பேக்' (Deepfake) தொழில்நுட்பம் மூலம் ஆபாச காணொளிகளை உருவாக்குகின்றனர்.இக்காணொளிகளைப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி, இந்திய வங்கிக் கணக்குகளுக்குப் பெருந்தொகையான பணத்தை அனுப்புமாறு வற்புறுத்துகின்றனர்.சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போதும், அவர்கள் செய்யும் காணொளி அழைப்புகளை ஏற்கும்போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.இந்த மோசடியில் சாதாரண மக்கள் மட்டுமன்றி, சமூகத்தில் செல்வாக்கு மிக்க பல முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது போன்ற மிரட்டல்களுக்கு உள்ளானால், பயந்து பணத்தை அனுப்ப வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலங்கை சைபர் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.டிஜிட்டல் உலகில் அறிமுகமில்லாத நபர்களிடம் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உரையாடல்கள்பேராபத்தை விளைவிக்கும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.