மஸ்கெலியா - நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பிரதேச மக்கள், நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு கற்களுக்கு இடையில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 22ஆம் திகதி மஸ்கெலியா மவுஸ்சாகலை தோட்டத்தில் வசித்து வந்த மருதவீரன் சபாபதி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஏழு கன்னி மலைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் மருதவீரன் சபாபதியினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சடலத்தை அடையாளம் காண அவரது சகோதரருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், சடலம் தனது சகோதரர் மருதவீரன் சபாபதியுடையது என அடையாளம் காட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர், அது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மஸ்கெலியா - நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பிரதேச மக்கள், நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து, நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, இரண்டு கற்களுக்கு இடையில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த 22ஆம் திகதி மஸ்கெலியா மவுஸ்சாகலை தோட்டத்தில் வசித்து வந்த மருதவீரன் சபாபதி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால், ஏழு கன்னி மலைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் மருதவீரன் சபாபதியினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, சடலத்தை அடையாளம் காண அவரது சகோதரருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், சடலம் தனது சகோதரர் மருதவீரன் சபாபதியுடையது என அடையாளம் காட்டியுள்ளார்.சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர், அது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.