• Apr 15 2026

பணத்தை மட்டுமல்ல.. இனி தூக்கத்தையும் சேமிக்கலாம்;எப்படி தெரியுமா?

Ziya / Apr 7th 2026, 12:34 pm
image

இன்றைய இயந்திரத்தனமான ஓட்டத்தில் நம்மில் பலருக்குப் போதுமான அளவு தூங்குவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 

இதனால் ஏற்படும் 'தூக்கக் கடனை' (Sleep Debt) அடைக்க, வங்கியில் பணத்தைச் சேமிப்பது போலவே தூக்கத்தையும் முன்கூட்டியே சேமித்து வைக்கும் 'ஸ்லீப் பேங்கிங்' முறை தற்போது உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.

எதிர்காலத்தில் வரப்போகும் தூக்கமில்லா இரவுகளைச் சமாளிக்க, முன்கூட்டியே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கி வைப்பதே இந்த 'ஸ்லீப் பேங்கிங்' ஆகும்.

அது யார் யாருக்கு உதவும்?

திடீர் அலுவலகப் பயணம் மேற்கொள்பவர்கள், இரவு முழுவதும் கண்விழித்துப் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கும் தாய்மார்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

தூக்கமின்மையைச் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, தினசரி வழக்கத்தை விட ஒரு 60 முதல் 90 நிமிடங்கள் கூடுதலாகத் தூங்கி அதனை உடலில் சேமித்து வைக்க வேண்டும்.

இது ஏதோ கற்பனை அல்ல அமெரிக்காவின் 'வால்டர் ரீட்' (Walter Reed) தேசிய ராணுவ மருத்துவ மையம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய 30-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

முன்கூட்டியே தூக்கத்தைச் சேமிப்பவர்கள், தூக்கமில்லாத காலங்களில் மற்றவர்களை விடச் சிறப்பான மூளைத்திறன் மற்றும் நிலையான மனநிலையுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் விரைந்து முடிவெடுக்கும் திறன் இவர்களுக்குக் குறையாமல் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

உடலுக்குத் தேவையான உறக்கத்திற்கும் உதாரணமாக 8 மணிநேர உறக்கத்திற்கும் , நமக்குக் கிடைக்கும்  6 மணிநேர உறக்கத்திற்கும்  இடையே உள்ள இடைவெளியே 'தூக்கக் கடன்' எனப்படுகிறது. 

இந்தக் கடனைச் சரி வரக் கவனிக்கா விட்டால் கவனமின்மை, மூளைச் சோர்வு மற்றும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

"ஒவ்வோர் இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை சீரான மற்றும் தரமான தூக்கத்தைப் பெறுவதே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. 

அவசரத் தேவைக்காக மட்டும் 'ஸ்லீப் பேங்கிங்' முறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."

பணத்தை மட்டுமல்ல. இனி தூக்கத்தையும் சேமிக்கலாம்;எப்படி தெரியுமா இன்றைய இயந்திரத்தனமான ஓட்டத்தில் நம்மில் பலருக்குப் போதுமான அளவு தூங்குவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் ஏற்படும் 'தூக்கக் கடனை' (Sleep Debt) அடைக்க, வங்கியில் பணத்தைச் சேமிப்பது போலவே தூக்கத்தையும் முன்கூட்டியே சேமித்து வைக்கும் 'ஸ்லீப் பேங்கிங்' முறை தற்போது உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.எதிர்காலத்தில் வரப்போகும் தூக்கமில்லா இரவுகளைச் சமாளிக்க, முன்கூட்டியே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கி வைப்பதே இந்த 'ஸ்லீப் பேங்கிங்' ஆகும்.அது யார் யாருக்கு உதவும்திடீர் அலுவலகப் பயணம் மேற்கொள்பவர்கள், இரவு முழுவதும் கண்விழித்துப் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்கும் தாய்மார்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.தூக்கமின்மையைச் சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, தினசரி வழக்கத்தை விட ஒரு 60 முதல் 90 நிமிடங்கள் கூடுதலாகத் தூங்கி அதனை உடலில் சேமித்து வைக்க வேண்டும்.இது ஏதோ கற்பனை அல்ல அமெரிக்காவின் 'வால்டர் ரீட்' (Walter Reed) தேசிய ராணுவ மருத்துவ மையம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய 30-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.முன்கூட்டியே தூக்கத்தைச் சேமிப்பவர்கள், தூக்கமில்லாத காலங்களில் மற்றவர்களை விடச் சிறப்பான மூளைத்திறன் மற்றும் நிலையான மனநிலையுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.அவசர காலங்களில் விரைந்து முடிவெடுக்கும் திறன் இவர்களுக்குக் குறையாமல் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.உடலுக்குத் தேவையான உறக்கத்திற்கும் உதாரணமாக 8 மணிநேர உறக்கத்திற்கும் , நமக்குக் கிடைக்கும்  6 மணிநேர உறக்கத்திற்கும்  இடையே உள்ள இடைவெளியே 'தூக்கக் கடன்' எனப்படுகிறது. இந்தக் கடனைச் சரி வரக் கவனிக்கா விட்டால் கவனமின்மை, மூளைச் சோர்வு மற்றும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்."ஒவ்வோர் இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை சீரான மற்றும் தரமான தூக்கத்தைப் பெறுவதே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. அவசரத் தேவைக்காக மட்டும் 'ஸ்லீப் பேங்கிங்' முறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."

Advertisement

Advertisement

Advertisement