• Apr 14 2026

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை! - ஈரான் அதிரடி அறிவிப்பு

Chithra / Apr 12th 2026, 4:09 pm
image

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். 


X தளத்தில் பதிவிட்டுள்ள கலிபாப், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் நல்லெண்ணத்தையும் விருப்பத்தையும் கொண்டிருந்ததாக வலியுறுத்தியுள்ளார். 


இருப்பினும், முந்தைய இரண்டு போர்களின் அனுபவங்கள் காரணமாக தமக்கு மறுபுறம் இருந்த தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஈரானிய தூதுக்குழு முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை முன்வைத்த போதிலும், எதிர்த் தரப்பினர் இந்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் இறுதியில் தோல்வியடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 


மேலும், ஈரானின் நாற்பது நாள் தேசிய தற்காப்பு சாதனைகளை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்து நாம் ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 


இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வசதிகளைச் செய்து கொடுத்த பாகிஸ்தானுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை 

இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாக 'மெஹர்' (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.


முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டுள்ளார்


இதனைத் தொடர்ந்து ஈரானியத் தரப்பும் தற்போது புறப்பட்டுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய முக்கிய முரண்பாடுகள் காரணமாக எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.


அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் அதிரடி அறிவிப்பு பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள கலிபாப், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் நல்லெண்ணத்தையும் விருப்பத்தையும் கொண்டிருந்ததாக வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், முந்தைய இரண்டு போர்களின் அனுபவங்கள் காரணமாக தமக்கு மறுபுறம் இருந்த தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய தூதுக்குழு முன்னோக்கிச் செல்லும் முயற்சிகளை முன்வைத்த போதிலும், எதிர்த் தரப்பினர் இந்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் இறுதியில் தோல்வியடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானின் நாற்பது நாள் தேசிய தற்காப்பு சாதனைகளை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்து நாம் ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், வசதிகளைச் செய்து கொடுத்த பாகிஸ்தானுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.இதேவேளை இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாக 'மெஹர்' (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டுள்ளார்இதனைத் தொடர்ந்து ஈரானியத் தரப்பும் தற்போது புறப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய முக்கிய முரண்பாடுகள் காரணமாக எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement